ETV Bharat / jagte-raho

பெங்களூரு கலவரம் : ஒரு லட்சம் கைப்பேசி எண்களின் இணைப்பைத் துண்டித்த சிசிபி தொழில்நுட்பக் குழு! - பெங்களூரு கலவரம்

பெங்களூரு கலவரம் தொடர்பாக இதுவரை 120 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு லட்சம் கைப்பேசி எண்களின் இணைப்பைத் துண்டித்து சிசிபி தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

Bengaluru riot
Bengaluru riot
author img

By

Published : Aug 17, 2020, 3:51 PM IST

மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றால் பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை ஒடுக்க காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். வன்முறையில் 60 காவலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சூழலில் ஒரு லட்சம் கைப்பேசி எண்களின் இணைப்பைத் துண்டித்து சிசிபி தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

டி.ஜி.ஹல்லி, கே.ஜி.ஹல்லி காவல் நிலையங்களில் நடந்த கலவரம் குறித்த செய்திகள் தேசிய அளவில் கவனம் பெற்றதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் முழுமையான தகவல்களை சேகரித்து வருகின்றனர். பெங்களூருவில் நடந்த கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் கமல் பந்த் தலைமையிலான தனிப்பிரிவு காவல் துறையினர் கலவரம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் மங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களையும், அவற்றின் காணொலி ஆதாரங்களையும் பெங்களூரு கலவர காணொலியையும் ஒப்பிட்டு ஆராய்ந்து வருகின்றனர். தற்போது சம்பவம் நடந்த இடத்திலிருந்த ஒரு லட்சம் கைப்பேசி எண்களின் இணைப்பைத் துண்டித்து சிசிபி தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

காவல் நிலையத்தை தாக்கியது, சட்டபேரவை உறுப்பினர் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டைத் தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ், எஸ்டிபிஐ, பிடிஎஃப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 22 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாகவாரா வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் இர்ஷத் பேகமின் கணவர் கலீம் பாஷாவும், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த முஷாமில் பாஷாவும் அடங்குவர்.

சம்பவம் நடந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் காடுகொண்டனஹள்ளி, தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைசந்திரா ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கைதானவர்களில் ஒருவரான நதீம் என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு உயிரிழந்தார். இதுவரை 120 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மஜதவில் இருந்து விலகிய அகண்ட சீனிவாச மூர்த்தி, 2018ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்லில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதைமீறி மேலிடம் வாய்ப்பு வழங்கியதால் உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.