மழைக்காலம் வேண்டித் தவித்திருப்போர் ஏராளம். அவ்வாறான காலக்கட்டங்களில் மக்கள் தங்களை நோய்களிலிருந்தும், மின் கசிவிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம், வெயில் காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளை ஒப்பீடு செய்து பார்க்கையில், மழைக் காலங்களில் பலியானோர் எண்ணிக்கை அதிகளவில் கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படியாக மழைக் காலம் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், இந்த சிசிடிவி காட்சி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண், சேற்றில் கால் படாமல் இருக்க, மின் கம்பத்தைப் பிடித்துத் தாவ முற்படுகிறார். அப்போது, மின்சாரம் தாக்கப்பட்டு, சரிந்து பலியாகிறார்.
இக்காணொளி மூலம் நாம் அறியப்படும் தகவல் என்னவென்றால், மழை நேரங்களில் மின் கசிவின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதே. ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்பதைக் கருத்தில்கொண்டு பயணியுங்கள் என்பதே இக்காட்சி உணர்த்தும் பாடமாக அமைகிறது.