தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கருப்பூரில் வைஷ்ணவி, ஜெயசக்தி, ராஜராஜஜேஸ்வரி கோயில் உள்ளது. இதன் நிர்வாகியாக இருந்த ராமதாஸ் சாமி இறந்து ஓராண்டு ஆகிறது. தற்போது, அவருக்கு பதிலாக அவரது தம்பி லெட்சுமணன் மகன் தாசரதி இக்கோயிலை (59) நிர்வாகம் செய்துவருகிறார்.
இந்நிலையில், அவரை கடந்த 8ஆம் தேதி 30 வயதுள்ள அடையாளம் தெரியாத நபர் கோயிலுக்குள் புகுந்து தாசரதியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். இதில் காயமடைந்த தாசரதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இதுதொடர்பாக தாசரதி நடுக்காவேரி காவல் நிலையத்தில் நவ.9ஆம் தேதி புகாரளித்தார்.
அந்தப் புகாரில், எனது பெரியப்பா மகள் ராஜலெட்சுமி மகன் ராஜேஷ் தூண்டுதலின் பேரில் என்னை கொலை செய்யும் நோக்கத்தோடு வீடு புகுந்து வெட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். புகாரின்பேரில் நடுக்காவேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடிவருகின்றனர்.
யார் இந்த தாசரதி சாமி?
கருப்பூர் ராமதாசுக்கு கோனேரிராஜபுரம் அக்ரஹாரத்தில் சொந்த வீடு உள்ளது. அவர் கருப்பூரில் உள்ள வைஷ்ணவி ஜெயசக்தி ராஜராஜஜேஸ்வரி கோயிலில் பூஜை செய்தும், குறி சொல்லியும் வந்தார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் அருகில் உள்ள ஒரு மண்டபம் கட்டியும், நிலங்கள் வாங்கியும் உள்ளார்.
ராமதாசுக்கு ராஜலெட்சுமி என்ற மகள் உள்ளார். அவர் திருமணமாகி சென்னையில் உள்ள நிலையில், அவருக்கு ராஜேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் சென்னையில் சினிமா தொடர்பான வேலையில் இருக்கிறார்.
இந்நிலையில், ராமதாஸ் இறந்தபிறகு அவரது வாரிசாக தம்பி லெட்சுமணன் மகன் தாசரதி கோயில் நிர்வாகத்தையும், அக்கோயிலில் பூஜை செய்தும், குறி சொல்லியும் ராமதாஸ் சொத்துகளை தாசரதி நிர்வகித்துவருகிறார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் தேசிய பச்சிளங் குழந்தைகள் வாரம்