சென்னை: பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் வர்கீஸ் (51), தொழிலதிபர். அனகாபுத்தூரில் திருமண மண்டபம் வைத்திருக்கும் இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
வர்கீஸ் அதே பகுதியை சேர்ந்த கலால் ஆய்வாளராக பணிபுரியும் ஸ்டாலின் என்பவருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டினை கட்டி கொடுத்துள்ளார். இதற்காக ரூ. 94 லட்சம் வரை பணம் வழங்கிய கலால் ஆய்வாளர் ஸ்டாலின், மீதமுள்ள ரூ.6 லட்சத்தை தர முடியாது என்று கூறி வர்கீஸிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து வர்கீஸ் சங்கர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வர்கீஸ் வீட்டை கற்கள் வீசி சரமாரியாக தாக்கியுள்ளது. தொடர்ந்து கலால் ஆய்வாளர் ஸ்டாலின் மீது கொடுத்துள்ள புகார் மனுவை திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம் என வர்கீஸை மிரட்டி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று(ஜன.7) இரவு வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த வர்கீஸை, திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூவர், இரும்பு கம்பியால் தாக்கி மீண்டும் மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதனை வர்கிஸின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து, இந்த சம்பவத்திற்க்கு காரணமான ஆய்வாளர் ஸ்டாலின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு சங்கர் நகர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட ஆய்வாளரின் உறவினர்களான நெல்சன், ஆண்ரூஸ், சேவியர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பல கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருளை கடத்த முயன்ற இருவர் கைது...!