ETV Bharat / jagte-raho

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, பணம் கொள்ளை!

வீடு கட்டுமான பொருட்கள் விற்பனையகம் நடத்திவரும் ராஜ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. அவர் மனைவி அளித்த தகவலின்படி, 30 சவரன் நகையும், 3 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் பணமும் திருடுபோயிருப்பதாகக் கூறப்படுகிறது.

ariyalur rajkumar house theft
ariyalur rajkumar house theft
author img

By

Published : Sep 23, 2020, 11:27 AM IST

அரியலூர்: வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடங்குடி கிராமத்தில் வீடு கட்டுமான பொருட்கள் விற்பனையகம் நடத்திவருகிறார். ராஜ்குமாருக்கு 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், அதே கிராமத்திலுள்ள தனது தந்தை ராமதாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.

இச்சூழலில், இன்று காலை ராஜ்குமார் மனைவி ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அலமாரியில் இருந்த 30 சவரன் நகையும், 3 லட்சத்து 40 ஆயிரம் பணமும் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவம் குறித்து தா.பழூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.