பம்மல். நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய வரும் மக்களிடம் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நீலாங்கரை, பம்மல் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் நடத்திய இந்த சோதனையில், நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத சுமார் 2,32,935 ரூபாய் பணமும், பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 12,380 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, இதில் தொடர்புள்ள அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிக்கன் கடையில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது