ETV Bharat / jagte-raho

சமூக வலைதளத்தில் அவதூறுப் பதிவு - காவல் துறையால் தேடப்படும் இந்து சபா நிர்வாகியின் ஓட்டுநர்கள் கைது! - இந்து மகாசபா

சென்னை: சமூக வலைதளத்தில் அவதூறுப் பதிவுகள் செய்ததாக, பாலியல் புகாரில் தேடப்பட்டுவரும் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் ஓட்டுநர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

mahasabha
mahasabha
author img

By

Published : Feb 1, 2020, 3:15 PM IST

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 08-01-2020 அன்று அளித்த புகாரின் அடிப்படையில், அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஶ்ரீ என்ற ஶ்ரீகண்டன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவந்தனர்.

இதனிடையே, இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கணவரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை திருப்பிக் கேட்டதற்கு வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிரஞ்சனி தவறான நடவடிக்கையை கொண்டவர் என்றும் தெரிவித்தார். நிரஞ்சனி பலருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் அப்போது அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இந்நிலையில், தொடர்ந்து தன்னை சமூக வலைதளங்களில் ஶ்ரீகண்டனும் அவருடைய ஆட்களும் இழிவுப்படுத்திவருவதாக, நிரஞ்சனி இணையதளம் வாயிலாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21ஆம் தேதி புகார் அளித்தார்.

அதனடிப்படையில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சமூக வலைதளத்தில் அவதூறு பதிவுகள் செய்ததாக ஸ்ரீகண்டனின் ஓட்டுநர்கள் ஜெயபாலாஜி, நடராஜன் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக தலைமறைவாக உள்ள கோடம்பாக்கம் ஸ்ரீகண்டனை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை

Intro:Body:*அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் ஓட்டுநர்கள் கைது.*

சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 08-01-2020 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஶ்ரீகண்டன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட 394 (b), 354 (A), 506(i), 509, மற்றும் 4இ of TNPHW Act உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்...

இந்த நிலையில் இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டன் மனைவி நான்சி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவரிடம் வேண்டுமென்றே 20லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கேட்டதற்கு பாலியல் புகார் அளித்து இருப்பதாகவும் எனவே நிரஞ்சனி தவறான நடவடிக்கையை கொண்டவர் என்றும் அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அவர் பலருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் அவர் அப்போது வெளியிட்டார். தனது கணவர் நிரஞ்சனி போன்று பலருக்கு உதவி செய்து இருப்பதாகவும் ஆனால் இரண்டுமே தவறான நடத்தை கொண்டு வேண்டுமென்றே பழிவாங்கு வதற்காக இப்படியொரு புகார் அளித்திருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இந்திலையில் தொடர்ந்து தன்னை சமூக வளைதளங்களில் ஶ்ரீகண்டன் இழிவு படுத்தி வருவதாகவும் தனுது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை பரப்பி வருவதாக இணையதளம் வாயிலாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையில் கடந்த 21ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 506(i), 4 of TNPHW ACT -2002, மற்றும் 67 IT Act-2000 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் தலைமறைவாக உள்ளார் அவரை தொடர்ந்து தீவிரமாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நிரஞ்சனியை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக அவதூறு பதிவுகள் செய்த கோடம்பாக்கம் ஸ்ரீயின் ஓட்டுனர்களான ஜெயபாலஜி, நடராஜன் ஆகியோர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.