ETV Bharat / jagte-raho

அதிமுகவினர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர நில உரிமையாளர்கள் கோரிக்கை

சேலம்: குரங்குச்சாவடி பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலத்தை அதிமுக பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ளதை மீட்டுத் தரக்கோரி நில உரிமையாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

salem
salem
author img

By

Published : Oct 1, 2020, 12:08 AM IST

சேலம் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில், குரங்குச்சாவடி பகுதியில் உள்ள புது மாரியம்மன் கோயில் நிலத்தை அதிமுக பிரமுகரான ஏ.கே. பாலு என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகப் புகாரளித்தார்.

இது தொடர்பாக ஏழுமலையின் சகோதரர் அன்புமணி கூறியதாவது, "பரம்பரை பரம்பரையாக எங்கள் வம்சா வழியினர் பயன்படுத்திவரும் நிலம் இது. எங்களது கோயிலுக்கு மானியமாக மூதாதையர் வழங்கிய இந்த நிலத்தை அதிமுக பிரமுகர் ஏ.கே. பாலுவும் அவரது மைத்துனர் ராஜேந்திரனும் தற்போது தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கோயில் நிலம் எங்களுக்கு சொந்தமானது

எங்களது பங்காளிகளுக்குள் பாகப்பிரிவினையில் ஏற்பட்ட பிரச்னையை சாதகமாக்கிக் கொண்ட பாலுவும், ராஜேந்திரனும் நீதிமன்றம் சென்று அரசியல் அதிகார பலத்தை வைத்து தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

காவல் துறை உடனடியாக விசாரணை செய்து எங்கள் நிலத்தை அவர்களிடமிருந்து மீட்டு கொடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார்.

இதையும் படிங்க: 'சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமனதுடன் தலைவணங்கி ஏற்கிறேன்' - எல்.கே. அத்வானி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.