ETV Bharat / jagte-raho

குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்எல்ஏ அலுவலர்! - கண்ணாடி உடைப்பு

சென்னை: குடிபோதையில் மதுபான பார் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர் உட்பட 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

cadre
cadre
author img

By

Published : Dec 30, 2019, 4:50 PM IST

சென்னை கோடம்பாக்கம் முக்கிய சாலையில் பிரதாப் பிளாசா பார் என்னும் மதுக்குடிப்பகத்துடன் கூடிய உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு வடபழனியைச் சேர்ந்த மனோஜ் குமார் (29) என்பவர் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த வேறு 3 நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோஜ் குமார், தனது நண்பர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

இதனைக்கண்ட மதுக்குடிப்பக மேலாளர் விஸ்வநாதன் அறைக்கதவை மூடியுள்ளார். இதனால் கோபமடைந்த மனோஜ் குமாரும், நண்பர்களும் அங்குள்ள கண்ணாடியை உடைத்துள்ளனர். இதுதொடர்பாக மேலாளர் விஸ்வநாதன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட தி. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யாவின் அலுவலகப் பணியாளர் சண்முகம், கானாப் பாடகர் சுதாகரின் கார் ஓட்டுநர் அயாத், மனோஜ்குமார், அசோக்குமார், விஸ்வேஸ்வரன், சந்தோஷ்குமார், மானிக் பாட்சா ஆகிய 7 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் மருந்தகத்தில் ஊசி போட்டுக்கொண்ட பெண் மரணம்!

Intro:Body:குடிப்போதையில் தகராறில் ஈடுப்பட்டு பாரின் கண்ணாடியை உடைத்த அதிமுக எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணிப்புரிபவர் உட்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை.

சென்னை கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஹோட்டல் பிரதாப் பிளாசா பார் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று இரவு வடபழனி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார்( 29) என்பவர் இந்த பாரில் மது அருந்தி வந்துள்ளார்.அப்போது அதே பாரில் மது அருந்தி கொண்டிருந்த 3நபர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் தகராறில் மனோஜ்குமாரை 3 பேர் தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் கோபமடைந்த மனோஜ் குமார் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து சுமார் 6 பேரை பாரிற்கு வரவழைத்தார்.இதனை கண்ட பாரின் மேலாளர் விஸ்வநாதன் பாரின் கதவை மூடி உள்ளார். இதனால் கோபமடைந்த 7பேர் கொண்ட கும்பல் பாரின் கண்ணாடியை உடைத்து உள்ளார். இது தொடர்பாக பாரில் மேலாளர் விஸ்வநாதன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் ரகளையில் ஈடுப்பட்ட தி.நகர் எம்.எல்.ஏ சத்யா அலுவலகத்தில் பணிப்புரியும் சண்முகம்,கானா பாடகர் சுதாகரின் கார் ஓட்டுனர் அயாத்(19),மனோஜ்குமார்,அசோக்குமார்,விஸ்வேஸ்வரன்,சந்தோஷ்குமார்,மானிக் பாட்சா ஆகிய 7பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.