பல்லாவரத்தை அடுத்த பம்மல் மூங்கிலேரி பிரதான சாலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தை பறித்ததோடு, செல்ஃபோனையும் பறிக்க முயற்சித்துள்ளது. அந்த வழிப்பறி கும்பலிடமிருந்து தப்பித்த அந்த நபர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
உடனே நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, வழிப்பறியில் ஈடுபட்டது பல குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளி மதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அக்கும்பலை தேடிய காவல் துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட பம்மல் பகுதியை சேர்ந்த சூர்யா (20), உதயகுமார் (22), சரவணன் (21) ஆகிய மூவரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மதன் தலைமறைவானதால், அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் அலுவலகத்தில் 15 பவுன் நகை கொள்ளை!