விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இசக்கி முத்துவை பழிதீர்க்க நினைத்த மாடசாமி நேற்றிரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
அதில், அவர் சம்பவ இடத்திலேயே இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இசக்கி முத்துவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.