உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் முலும்மில் உசேன்(40). இவர் ரியாத்தில் டிரைவர் வேலை செய்துவருகிறார். மேலும் இவருடைய நான்கு ஆண்டுகளுக்கான பணி விசா முடிவடைந்து சொந்த ஊர் திரும்பினார். இவர் ரியாத்திலிருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார். அப்போது சுங்கத் துறை அலுவகலர்கள் பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர்.
அதில் முலும்மில் உசேன் எடுத்து வந்த எமெர்ஜென்சி விளக்கை சோதனை செய்தபோது விளக்கிற்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட 70.5 லட்சம் மதிப்புடைய 1.9 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத் துறை அலுவலர்கள் முலும்மில் உசேனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் முலும்மில் உசேனின் நண்பர் ஒருவர் சென்னையில் தனக்கு உறவினர் ஒருவர் உள்ளார் எனவும் நீங்கள் ஊருக்கு செல்லும்போது அவரிடம் இந்த எமெர்ஜென்சி விளக்கை கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு வெகுமதியாக ரியாத்திலிருந்து சென்னைக்கு விமான டிக்கட் எடுத்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவரிடம் விளக்கை வாங்க வந்த கடத்தல் ஆசாமியையும் சுங்கத் துறை அலுவலர்கள் தேடிவருகின்றனர்.