உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு கிராமத்தில் திருமண ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் ஐந்து குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நேற்று(நவ .1) இரவு நிசழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சவான்(7), உம்மது (8), ரிஹான்(9), அங்கித்(10), அமீர் (10) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஷாப்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பால்டா கிராமத்தில் ஊர்வலம் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அலுவலர் விர்ஜா சங்கர் திரிபாதி கூறுகையில், திருமண ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் அருகில் பட்டாசுகள் அடங்கிய ஒரு பையில் தீப்பிடித்துள்ளது. அப்போது அந்த பட்டாசுகள் ஒட்டு மொத்தமாக வெடித்ததால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்., என்றார்.
இதற்கிடையில், மீரட்டில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத இருந்த பட்டாசுகள், வெடிபொருட்களை நேற்று (நவ 1) காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.