திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை , மருங்காபுரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் கவனத்தை திசைத்திருப்பி இருசக்கர வாகனத்தில் வைக்கப்படும் பணம் மற்றும் வங்கியிலிருந்து எடுத்து வரும் பணம் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மணப்பாறை, துவரங்குறிச்சி போலீஸார், காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனி குற்றப்பிரிவு அமைத்து கொள்ளையடித்தவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை திண்டுக்கல் சாலையில் வங்கிகள் உள்ள பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்கு தயாராக கூடியிருந்த அவர்கள் ஐந்து பேரை மடக்கி பிடித்து, துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனி குற்றப்பிரிவு போலீஸார், அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ஓ.ஜி.குப்பத்தைச் சேர்ந்த மோகன் (30), சரவணன் (27), ராணா (30), பாபு (40) மற்றும் மும்பையைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (54) என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:
அடுத்தடுத்து 10 வீடுகளில் கொள்ளை; கொள்ளையடித்தது ஐயப்ப பக்தர்களா? - சந்தேகிக்கும் மக்கள்!