திருவண்ணாமலை மாவட்டம் வேரையூர் அருகேயுள்ள பெருமன்றம் கிராமத்தில் அனுமதியின்றி செங்கல் சூளைக்கு டிராக்டர் மூலம் செம்மண் எடுத்து செல்வதாக டிஎஸ்பி அண்ணாதுரைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் அனுமதியின்றி செங்கல் சூளைக்கு செம்மன் எடுத்த நான்கு டிராக்டர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருள்குமார் (23), ராஜாமணி( 44), ரமேஷ் (29), மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நான்கு டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: முக ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது - இன்பத்துரை எம்எல்ஏ