ETV Bharat / jagte-raho

ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 39 பவுன் நகை கொள்ளை! - 39 பவுன் நகை கொள்ளை

கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 39 பவுன் நகை, இரண்டு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

jewels robbery
jewels robbery
author img

By

Published : Nov 10, 2020, 2:44 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு (70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று (நவ. 09) இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க வாசலை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 39 பவுன் நகை, இரண்டு லட்ச ரூபாய் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் காலையில் எழுந்து பீரோவை பார்த்த வேலு, பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட ஆசிரியர் வீடு

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், கைரேகை நிபுணர்களும் விசாரணை நடத்தினர். விசாரணையில், பீரோவில் இருந்த 35 பவுன் நகை, இரண்டு லட்ச ரூபாய் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவரை கொல்ல முயன்ற மனைவி, நண்பருடன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.