பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ரோவர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் . இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற இவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும், பீரோவில் உள்ள 36 பவுன் நகைகள் திருட்டு போனதும் தெரிய வந்தது.
இதனிடையே காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: