ஈரோடு அய்யன்காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன். கட்டட தொழிலாளியான இவர், பணி முடிந்து தனது நண்பர்களுடன் \ நெரிகல்மேடு அரசு மதுபானக் கடைக்கு மது அருந்த சென்றார்.
அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், துரையன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற கருங்கல்பாளையம் காவல் துறையினர், அசோகபுரத்தைச் சேர்ந்த பாபு, சரவணன், கக்கன் நகரைச் சேர்ந்த மாதேஷ் ஆகிய மூவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'செய்ய முடியாததையும் செய்து காட்டியவர் ஜெயலலிதா' - அமைச்சர் புகழாரம்