ETV Bharat / jagte-raho

24 மணி நேரத்தில் 2 படுகொலை - மதுரையில் தொடரும் பயங்கரம்! - 24 மணி நேரத்தில் 2 படுகொலை

மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நிகழும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

2 murders in 24 hours in madurai
2 murders in 24 hours in madurai
author img

By

Published : Oct 11, 2020, 2:25 AM IST

மதுரை: கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாக்ரடீஸ் என்ற தேவா முன்விரோதம் காரணமாக நேற்று மாலை சொக்கலிங்க நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் துவரிமான் அருகேயுள்ள சுடுகாட்டு பகுதியில் வீசப்பட்டிருந்தது. இதுகுறித்து, நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கினை விசாரித்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக, நேற்று (அக்.10) காலை பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பாண்டிகோயிலில் பூசாரிக்கு, உதவியாக இருக்கும் முத்துராஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர்.

முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட இக்கொலைச் சம்பவம் குறித்து மதுரை அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இவ்விரண்டு படுகொலை சம்பவங்களும் மதுரையில் பொதுமக்களிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.