ETV Bharat / jagte-raho

கூலித்தொழிலாளி பெயரில் வங்கியில் ரூ.19லட்சம் மோசடி! - கூலித்தொழிலாளி

விருதுநகர்: தனது பெயரில் வங்கியில் கடன் பெற்று ரூ.19 லட்சம் பணத்தை மோசடி செய்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் மனு அளித்தார்.

take action
author img

By

Published : Aug 7, 2019, 1:40 AM IST

Updated : Aug 7, 2019, 5:17 AM IST

விருதுநகர், பாலாஜி நகரைச் சேர்ந்தவர்கள் மதியழகன்- கோசாலை தம்பதி. கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு விருதுநகரைச் சேர்ந்த வேல்முருகன், செண்பகம் ஆகிய இருவரும் மதியழகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தேனிக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பள பணம் வங்கி கணக்கின் மூலம் தான் கொடுக்கப்படும் என்று கூறி அங்கு உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அழைத்து சென்று வங்கியில் கணக்கு தொடங்க மதியழகனிடம் கையொப்பம் பெற்று அதை முறைகேடாக பயன்படுத்தி வங்கியில் இருந்து ரூ.19 லட்சம் கடன் பெற்றுள்ளானர்.

labour worker  19 lakh  fraud  கூலித்தொழிலாளி  19லட்சம் மோசடி
கூலித்தொழிலாளியிடம் 19லட்சம் மோசடி

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வங்கியிலிருந்து மதியழகன் வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் நீங்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகைக்கு இதுவரை வட்டி எதும் செலுத்தவில்லை எனவும் குறிப்பிட்ட தேதிக்குள் வட்டி, அசலை செலுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதி வேல்முருகன், செண்பகத்திடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தம்பதியை மிரட்டியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் மதியழகன் தனது மகளின் மேற்படிப்பிற்காக வங்கியில் கல்விக்கடன் கேட்டபொழுது, உங்கள் மீது ஏற்கனவே உள்ள கடன் தொகை நிலுவையில் உள்ளதால், அதை காரணம் காட்டி கடன் தர மறுத்துவுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளரிடம் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மனு

தற்போது கூலித்தொழிலாளியான மதியழகனிற்கு உடல்நிலை சரியில்லை, எனவே நான் இறக்க நேர்ந்தால் இந்தக் கடன் தொகை தன் குடும்பத்தின் மீது விழக்கூடாது என்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் குடும்பத்துடன் சென்று மனு அளித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இதே போல் விருதுநகரைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களின் பெயர்களில், கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Last Updated : Aug 7, 2019, 5:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.