மணிலா (பிலிப்பைன்ஸ்): பிலிப்பைன்ஸின் மகுயிண்டனாவோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல் அலுவலர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மறைந்திருந்த இடத்திற்கு, அவர்களை கைதுசெய்ய அதிகாலை 3 மணியளவில் காவல் துறையினர் சென்றுள்ளனர். அப்போது காவல் துறையினர் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுல்தான் குடரத் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தில் காவல் துறை அலுவலர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் நடந்த இடத்திலிருந்து ஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு 50 காலிபர் துப்பாக்கி, ஒரு எம் 14 துப்பாக்கி, ஒரு ஒளி தானியங்கி துப்பாக்கி, 22 காலிபர் துப்பாக்கி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.