வாஷிங்டன்: இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் செப்.8ஆம் தேதி காலமானார். இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே அவரது மகன் 3ஆம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்படுள்ளார். 2ஆம் எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், "இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறேன். மன்னராக பதவி ஏற்கவுள்ள மூன்றாம் சார்லஸ் எனக்கு நன்கு தெரியும். ஆனால், இதுவரை நான் அவரிடம் பேசியது கிடையாது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரிட்டன் மன்னராகிறார் மூன்றாம் சார்லஸ்