ETV Bharat / international

பாஸ்போர்ட்டே இல்லாமல் வெளிநாடு பறந்த பயணி! - அது எப்படி?

விமான நிறுவனத்தின் கவனக்குறைவால் பாஸ்போர்ட் இல்லாமல் அமெரிக்காவில் இருந்து ஜமைக்கா நாட்டிற்கு பெண் பயணி சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

US
US
author img

By

Published : May 7, 2023, 9:04 PM IST

வாஷிங்டன் : அமெரிக்காவில் அண்டை நகரத்திற்கு செல்ல இருந்த உள்நாட்டு பயணி தவறுதலாக வேறு விமானத்தில் ஏறி கரீபியன் தீவு நாடான ஜமைக்காவிற்கு பாஸ்போர்ட் கூட இல்லாமல் சென்ற விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கவின் நியூ ஜெர்சி நகரை சேர்ந்த பெண் எல்லிஸ் ஹெப்ராட்.

பென்னிசில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலாடேல்பியாவில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லே நகருக்கு அடிக்கடி பயணம் செய்வதை இவர் வழக்கமாக கொண்டு உள்ளார். ஏறத்தாழ பிலாடேலிபியாவையும், ஜாக்சன்வில்லேவையும் தனது வீட்டின் முன் வாசல் மற்றும் பின்வாசல் என்பது போல் கொண்டு வந்து உள்ளார்.

சம்பவத்தன்று எல்லிஸ் ஹெப்ராட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஜாக்சன்வில்லே நகருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். அதற்காக விமான நிலையமும் எல்லிஸ் வந்து இருக்கிறார். வழக்கமாக பயணிக்கும் விமானத்திற்காக காத்திருந்த எல்லிஸ் கழிவறை சென்று திரும்பி உள்ளார். ஆப்போது அவர் செல்லும் நுழைவுப்பகுதி மாற்றப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

எல்லிஸ் ஹெப்ராட் கடைசி நேரத்தில் வந்ததாலும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த விமானத்தில் பயணிகள் கிட்டத்தட்ட ஏறி முடிந்து கிளம்புவதற்கான நடைமுறைகளை செய்ய தயாரானதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவசர அவசரமாக எல்லிஸ் பெயரையும் மட்டும் உறுதிபடுத்தி விட்டு அங்கு இருந்த ஊழியரும் எல்லிஸ் ஹெப்ராட் விமானத்தில் பயணிக்க அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

எல்லிஸ் ஹெப்ராடும் வழக்கமாக பயணிக்கும் பகுதி என்பதால் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் சென்று உள்ளார். ஆனால், விமானத்தில் ஏறிய பிறகு தான் ஜமைக்கா செல்லும் சர்வதேச விமானத்தில் ஏறியிருப்பது அவருக்கு தெரியவந்து இருக்கிறது. இருப்பினும் அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், பயந்து போன எல்லிஸ் விமானத்திலேயே இருந்து உள்ளார். ஜமைக்காவிலும் அவர் இறங்க முடியாது என்ற காரணத்தால் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

பல மணி நேரங்கள் கழித்து பிலாடேல்பியா செல்லும் விமானத்தில் மீண்டும் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு இருக்கிறார். இது குறித்து விமானம் நிறுவனம் தரப்பில் கூறுகையில், கவனக் குறைவால் இந்த குளறுபடி ஏற்பட்டதாகவும், பயணிக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு விமான நிறுவனம் வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த பெண் பயணிக்கு விமான கட்டணம் முழுவதும் திரும்ப செலுத்தப்பட்டதாகவும், இழப்பீடாக 600 அமெரிக்கா டாலர் வவுச்சர் வழங்கப்பட்டு உள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக விமானம் நிறுவனம் கூறியது.

இதையும் படிங்க : மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் - விவசாய சங்கங்கள் ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.