காட்மாண்டு: நேபாள நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி இரு நாட்டு அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேபாளத்தின் பாங்கே மாவட்டத்தில் நடைபெற்றது. அதில், இந்தியா மற்றும் நேபாள எல்லை மாவட்டங்களின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன்பின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மற்றும் ஷ்ரவஸ்தி மாவட்டங்களின் எல்லைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 72 மணி நேரத்திற்கு எல்லை மூடப்பட உள்ளது. இதன் மூலம் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தல், ஊடுருவல் ஆகியவற்றை தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம் நேபாளத்துடன் பிலிபித், லக்கிம்பூர் கெரி, பஹ்ரைச், ஸ்ரவஸ்தி, பல்ராம்பூர், சித்தார்த்நகர் மற்றும் மஹராஜ்கஞ்ச் மாவட்டங்களின் வழியே 599 கி.மீ. தொலைவிலான எல்லையை பகிர்ந்துகொள்கிறது.
இதையும் படிங்க: நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்... மக்கள் பீதி...