ETV Bharat / international

கிவ் நகருக்கு அருகே 410 உடல்கள் மீட்பு : பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு - கிவ் நகருக்கு அருகே 410 உடல்கள் மீட்பு

உக்ரைனில் கிவ் நகருக்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்து 410 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை ரஷ்யப் படையினர் படுகொலை செய்துள்ளார்கள் என்றும் உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைன்
உக்ரைன்
author img

By

Published : Apr 4, 2022, 2:33 PM IST

உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய ஓரிரு வாரங்களில், உக்ரைன் தலைநகர் கிவ்-வை குறிவைத்து ரஷ்யப்படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தின. தலைநகரை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷ்யப் படைகள் தற்போது அங்கிருந்து வெறியேறி, உக்ரைனின் தெற்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், கிவ் அருகே உள்ள நகரங்களில் இருந்து, 410 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, உக்ரைனின் அரசு தலைமை வழக்கறிஞர் இரினா வெனடிக்டோவா (Iryna Venediktova) அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், கடந்த மூன்று நாள்களாக உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்றதாகவும், மீட்கப்பட்ட 410 உடல்களில், 140 உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட உடல்களில் அதிகளவு காயங்கள் இல்லை என்றும், பல உடல்களில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அவர்கள் ரஷ்யப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு, சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதேபோல் மோடிஜின் (Motyzhyn) நகர மேயரை ரஷ்யப் படைகள் கொலை செய்துவிட்டதாக, உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் (Iryna Vereshchuk)தெரிவித்தார். மேலும் உக்ரைனைச் சேர்ந்த 11 மேயர்களை ரஷ்யப்படைகள் கைது செய்து, சிறையில் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக நேற்று, வீடியோ வெளியிட்டிருந்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் பொதுமக்களை குறிவைத்து ரஷ்யப் படையினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நகரங்களில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறினால், மேலும் பல கொடுரமான உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்தார். பொதுமக்களை கொலை செய்யப்பட்டதற்கு, பல்வேறு நாட்டு தலைவர்களும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், உக்ரைன் அரசின் இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.

இதையும் படிங்க : பேச்சுவார்த்தை தோல்லி அடைந்தால் 3ஆம் உலகப்போர் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.