ETV Bharat / international

அமெரிக்கவில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்கவின் ஹூஸ்டனில் தெலங்கானாவை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்கவில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
அமெரிக்கவில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
author img

By

Published : Nov 28, 2022, 8:55 PM IST

ஹூஸ்டன்: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள ஓசர்க்ஸ் ஏரியில் மூழ்கி தெலங்கானாவை சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்ததாக ஹூஸ்டன் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கல்லூரியில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த உதேஜ் குந்தா(24), ஷிவா கெல்லிகாரி (25) பயின்றுவந்தனர். இவர்கள் நவம்பர் 26ஆம் தேதி அருகில் உள்ள ஓசர்க்ஸ் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.

அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து நீண்ட நேரமாக எந்த தகவலும் வராததால், நண்பர்கள் எங்களிடம் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து 2 உடல்களையும் மீட்டோம். அவர்களது குடும்பத்தாருக்கும் இந்திய தூதரகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை விரைவில் சொந்த நாட்டுக்கு கொண்டுவர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சீன போராட்டத்தில் பிபிசி செய்தியாளர் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.