நியூயார்க்: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், கணக்கை அங்கீகரிக்கும் வெரிஃபிகேஷன் ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர்கள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார், அதாவது இந்திய மதிப்பு படி சுமார் 660 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதன் மூலம், பயனர்கள் பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்களிலும் முன்னுரிமை பெறுவார்கள், இது ஸ்பேம்/ஸ்கேம்களைத் தோற்கடிக்க மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் நீண்ட வீடியோ மற்றும் ஆடியோவை கூடுதல் நேரத்தில் பதிவிடலாம்.
புளூ டிக்கிற்கான பயனர்களிடமிருந்து பெறப்படும் மாதாந்திர தொகை கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு வெகுமதி அளிக்க ட்விட்டர் வருமானத்தை பெருக்க உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இதுகுறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், எலான் மஸ்க் ப்ளூ டிக் பயன்படுத்த இனி மாதம் 660 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' சோதனையைத் தொடங்கியது கூகுள்