ETV Bharat / international

பாகிஸ்தானில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். இதில் 12 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 18, 2022, 8:51 PM IST

சிந்து: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நேற்றிரவு (நவ.17) வேன் ஒன்று பக்தர்களை ஏற்றிக்கொண்டு, செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்தது. கைர்பூர் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை ஓட்டுநர் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் தடுப்புகளில் மோதி நிலைதடுமாறிய வேன், சாலையோரம் இருந்த நீர் நிரம்பிய குட்டையில் கவிழ்ந்தது. குட்டை ஆழமாக இருந்ததால் வேன் அதில் மூழ்கியது. இந்த விபத்தில், வேனில் இருந்த 12 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனில் சென்ற அனைத்து பயணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 8 பேர் பெண்கள், 6 பேர் சிறுமிகள் மற்றும் 6 பேர் சிறுவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.