ETV Bharat / international

" தி ஹார்வர்டு லா ரிவ்யூ" பத்திரிக்கையின் தலைவரான இந்திய வம்சாவளி! - america news in tamil

அமெரிக்காவின் தி ஹார்வர்டு லா ரிவ்யூ பத்திரிக்கையின் 137வது தலைவராக முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஹார்வர்டு சட்டப் பள்ளி இதழின் முதல் பெண் இந்திய வம்சாவளி தலைவர் ஆகிறார் அப்சரா ஐயர்!

author img

By

Published : Feb 6, 2023, 12:27 PM IST

நியூயார்க்: அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் பயிலும் சட்ட மாணவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியாகும் இதழ், தி ஹார்வர்டு லா ரிவ்யூ (The Harvard Law Review). இதனை 1887ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இணை நீதிபதியான, லூயிஸ் டி.பிராண்டிஸ் உருவாக்கினார். இந்த இதழில் பல்வேறு சட்ட ரீதியான ஆராய்ச்சி கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன.

முக்கியமாக இந்த இதழில் எழுதப்பட்ட முதல் கறுப்பின தலைவர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றுள்ளார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்த இதழ், தற்போது 137வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தி ஹார்வர்டு லா ரிவ்யூ இதழின் 137வது தலைவராக அப்சரா ஐயர் தேர்வாகி உள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

2016ஆம் ஆண்டு யேலேயில் பொருளாதாரம், கணிதம் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டின் கிளாரெண்டன் ஆராய்ச்சியாளராக இணைந்து, பழங்குடியின மற்றும் தொல்லியல் ரீதியான சட்ட மீறல்கள் குறித்த ஆராய்ச்சியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதுவரை ஆயிரத்து 100 திருட்டு வழக்குகளை கண்டறிந்துள்ளார். 2020ஆம் ஆண்டு ஹார்வர்டு சட்டப் பள்ளியில் சேர்ந்த அப்சரா ஐயர், சர்வதேச மனித உரிமைகள் மையம் மற்றும் தெற்காசிய சட்ட மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.! ஒருவர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.