31 மே, 2022 வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ. 86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களின் வளங்களை நிர்வகிப்பதற்கும், குறிப்பாக மூலதனச் செலவுகளை நிதியாண்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் இழப்பீட்டுத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
21 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மஹாராஷ்டிவிராவிற்கு 14,145 கோடி ரூபாயும் , தமிழ்நாட்டிற்கு 9,062 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசத்திற்கு 8,874 கோடி ரூபாயும் , கர்நாடகாவிற்கு 8,633 கோடி ரூபாயும், டெல்லிக்கு 8,012 கோடி ரூபாயும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி கவுன்சில் மாநில, மத்திய அரசுகளை கட்டுபடுத்தாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு