சியோல்: தென் கொரியாவின் கிழக்கு கேங்வான் மாகாணத்தில் உள்ள யெமி மலைப்பகுதியில் 1,100 மீட்டர் ஆழத்தில் நிலத்தடியில் அமைந்துள்ள யெமி ஆய்வகம் அடுத்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று அடிப்படை அறிவியல் நிறுவனம் (ஐபிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வகம் 3,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதாகவும், இங்கு ஒரே நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்று யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலத்தடி ஆயவகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதி மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு பணியின் போது வெளியில் இருந்து வரும் கதிர்கள் மற்றும் இரைச்சல் குறுக்கிடாமல் தடுக்கவும், சிறிய பொருட்களின் சமிக்ஞைகளை கண்டறியவும் உதவும்படி அமைக்கப்பட்டுள்ளது என IBS கூறியது.
அமெரிக்காவில் இது போல் 1,478-மீட்டர் நிலத்தடியில் அமைந்துள்ள யு.எஸ். சான்ஃபோர்ட் அண்டர்கிரவுண்ட் ரிசர்ச் ஃபெசிலிட்டி மற்றும் கனடாவின் சட்பரி நியூட்ரினோ ஆய்வுக்கூடம் 2,300-மீட்டர் நிலத்தடியில் உள்ள பல முன்னேறிய நாடுகளில் இத்தகைய நிலத்தடி ஆராய்ச்சி வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விண்கல்லில் மோதும் விண்கலம்... நேரடி ஒளிபரப்பு செய்யும் நாசா...