ETV Bharat / international

6 வயது சிறுவன் ஆசிரியை மீது துப்பாக்கிச்சூடு - world news in tamil

வெர்ஜீனியாவில் 6 வயது சிறுவன் ஆசிரியை மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

6 வயது சிறுவன் ஆசிரியை மீது துப்பாக்கிச்சூடு!

author img

By

Published : Jan 7, 2023, 9:16 AM IST

வெர்ஜீனியா: அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள நியூபோர்ட் நியூஸ் என்ற நகரத்தில் ரிச்னெக் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 550 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (ஜன.6) 1ஆம் வகுப்பில் படித்து வரும் சிறுவன் (6), பள்ளி ஆசிரியை (30) மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த நியூபோர்ட் நியூஸ் நகர காவல் துறையினர், ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிரியை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 6 வயது சிறுவனிடம் எப்படி துப்பாக்கி வந்தது, துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உக்ரைனுக்கு 2.85 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.