ETV Bharat / international

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏறக்குறைய 44 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
author img

By

Published : Nov 21, 2022, 2:42 PM IST

Updated : Nov 21, 2022, 6:48 PM IST

இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 44 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வுகளின்படி, மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜகர்தா வரை உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என சியாஞ்சூர் நகரில் உள்ள உள்ளூர் நிர்வாக செய்தித்தொடர்பாளர் கூறினார்

அந்நாட்டு ஊடகம் நிலநடுக்கம் குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’நிலநடுக்கத்தால் மருத்துவமனையில் இதுவரை 300 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி பல பேருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகள், கட்டடங்கள், மருத்துவமனைகள், இஸ்லாமியப் பள்ளிகள் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளன.

நகரில் உள்ள சயாங் மருத்துவமனையில் அவசரப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவோரை தற்போது கவனித்து வருகின்றனர். மேலும் பக்கத்து கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன’ என்றார்.

இந்தோனேசியா நாட்டின் பேரிடர் தலைவர் நிலநடுக்கம் குறித்து கூறுகையில், ’கிராமங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு குடும்பங்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. மேலும் சியாஞ்சூர் பகுதியில் மட்டும் ஏறக்குறைய 14 பேர் இறந்திருக்கலாம்’ எனக் கூறினார்.

  • Nearly 20 people have been killed and at least 300 injured in an earthquake that rattled Indonesia's main island of Java, reports AFP citing local official

    — ANI (@ANI) November 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: செயற்கை நுண்ணறிவு: உலகளாவிய கூட்டாண்மையின் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது

Last Updated : Nov 21, 2022, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.