ETV Bharat / international

அமெரிக்காவில் 3வது வங்கி திவால்? பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கைப்பற்றிய ஜேபி மோர்கன் வங்கி! - சிலிகன் வேலி வங்கி

திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட அமெரிக்காவின் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் 84 கிளைகள் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின் பெயரில் செயல்படும் என அமெரிக்க மத்திய வைப்பு காப்பீட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

US
US
author img

By

Published : May 1, 2023, 4:28 PM IST

நியூயார்க் : திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட அமெரிக்காவின் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் (First Republic Bank) 84 கிளைகள் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின்(JPMorgan Chase) கிளைகாக செயல்படும் என பெடரல் டெபாசிட் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் அமெரிக்காவின் மத்திய வைப்பு காப்பீட்டு நிறுவனம் அறிவித்து உள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இரு பெரும் வங்கிகள் அடுத்தடுத்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மற்ற வங்கிகளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டது.

கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி திவாலானது. அந்த வங்கியின் 17 கிளைகளும் மூடப்பட்டன. வங்கியின் அனைத்து சொத்துகளையும் அமெரிக்க வங்கி ஒழுங்குமுறை அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.

அதேபோல், சிக்னேச்சர் வங்கியும் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அந்த வங்கியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்தடுத்த வாரங்களில் இரு பெரும் வங்கிகள் திவாலானது அமெரிக்க பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்தது. மேலும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கி வந்த வங்கிகளும் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி அமெரிக்காவின் 14வது பெரிய வங்கியாக இயங்கி வந்தது.

இந்த வங்கிக்கு ஏறத்தாழ 212 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை இருப்பதாக அந்நாட்டின் மத்திய வங்கி கணக்கிட்டு இருந்தது. நியூயார்க், கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய 8 மாகாணங்களில் 84 கிளைகளுடன் இந்த வங்கி செயல்பட்டு வந்தது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கி வந்த இந்த வங்கி கடந்த சில நாட்களுக்கு முன் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கியின் தொடர் வட்டி விகித உயர்வால் இந்த வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக கூறப்பட்டது.

நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை மீட்க, அமெரிக்காவின் முக்கிய வங்கிகள் நிதி பங்களிப்பு வழங்கின. ஜேபி மோர்கன், பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி வங்கிகள் ஏறத்தாழ 30 பில்லியன் டாலர் நிதி பங்களிப்பு வழங்கி, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் நிதி நெருக்கடியை சமாளித்தனர்.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா உள்ளிட்டப் பல்வேறு பெரும் பணக்காரர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு இருந்த ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி திவாலானது அமெரிக்கா பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் கோடீஸ்வரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை கொண்டு கடன் வழங்கியதே இந்த திவால் நிலைக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே நிறுவனங்களின் நிதி நிலை அடிப்படையை ஆய்வு செய்து அந்த நிறுவனங்களுக்கு டெபாசிட் ரேட்டிங் வழங்கும் மூடிஸ் அமைப்பும், பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி உள்ளிட்ட 5 நிதி நிறுவனங்களின் தரமதிப்பீட்டை மறு ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், மந்த நிலை மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க அந்த வங்கியை ஜேபி மோர்கன் வங்கி கையில் எடுத்து நடத்தும் என அமெரிக்கா மத்திய வைப்பு காப்பீட்டு நிறுவனம் அறிவித்து உள்ளது. 8 மாகாணங்களில் உள்ள பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் 84 கிளைகள் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியின் பெயரில் இயங்கும் என அமெரிக்க பெடரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் ஸ்திரத்தன்மை ஆட்டாம் காணாமல் இருக்கவும், முதலீட்டாளர்களிடம் இருந்து நிதிகளைப் பெற்று வங்கியின் நிதி நிலையை மீண்டும் சீரமைக்கும் நடவடிக்கையாகவும், பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் சொத்துகள் உள்ளிட்ட அனைத்தையும் ஜேபி மோர்கன் சேஸ் வங்கி கையாளும் என அமெரிக்க மத்திய வைப்பு காப்பீட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை! 2008 மீண்டும் திரும்புகிறதா? இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.