ETV Bharat / international

நாட்டிற்காக மக்கள் தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும் - பாகிஸ்தான் அமைச்சர் - பாகிஸ்தான் அமைச்சர் அஹ்சன் இக்பால்

நாட்டின் அந்நிய செலவீனத்தைக் குறைக்க மக்கள் தேநீர் அருந்துவதை குறைக்க வேண்டுமென பாகிஸ்தான் அமைச்சர் அஹ்சன் இக்பால் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிற்காக மக்கள் தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும் - பாகிஸ்தான் அமைச்சர்

author img

By

Published : Jun 25, 2022, 10:43 PM IST

லாகூர்: பாகிஸ்தானைச் சேர்ந்த ஓர் உயர் கல்வி அமைப்பு அந்நாட்டின் தேநீர் இறக்குமதி செலவை குறைக்க ஓர் யோசனையை முன்வைத்துள்ளது. அது என்னவென்றால், தேநீருக்கு பதிலாக மக்கள் மத்தியில் லஸ்ஸி, சத்து போன்ற அந்த ஊரில் தயாரிக்கப்படும் பானங்களை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதன் மூலம் தேநீர் இறக்குமதி செலவீனத்தைத் தவிர்க்கலாம் என்பது தான்.

இது குறித்து உயர் கல்வி ஆணையத்தின் தலைவர் சைஸ்தா சொஹைல், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களிடமும் வழிமுறைகளை யோசிக்கக் கோரி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், உள்நாட்டு தேயிலை தோட்டம் மற்றும் லஸ்ஸி .

சத்து போன்ற குளிர்பானங்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பது என்ற ஆலோசனையை குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் தேநீர் இறக்குமதி செலவீனத்தைக் குறைக்கலாம். சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் , நாட்டின் அந்நிய செலவீனத்தைக் குறைக்க இக்பால் தேநீர் அருந்துவதைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்.

இது குறித்து அவர் கூறுகையில், “உலகின் மிக அதீனப் படியாக தேநீர் இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. அதற்காக நாடு கடன் வாங்கும் நிலை உள்ளது. அதனால் நாட்டு மக்கள் அனைவரும் தேநீர் அருந்தும் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என மக்களிடம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தன்னுடைய ஆலோசனை பாகிஸ்தானின் பொருளாதார சிரமங்களைக் குறைக்க உதவும் என நம்புகிறார்.

இதையும் படிங்க: 'தமிழர்கள் மொழிக்காக போராடுபவர்கள்' - அமெரிக்காவில் தலைமை நீதிபதி பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.