ETV Bharat / international

Ocean Ring of Yoga: அமெரிக்காவில் பிரதமர் மோடி உலக யோகா தின உரை - origin of international yoga day

உலக யோகா தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் பிரதமர் மோடி உரை ஆற்றி உள்ளார்.

Ocean Ring of Yoga: அமெரிக்காவில் பிரதமர் மோடி உலக யோகா தின உரை

author img

By

Published : Jun 21, 2023, 9:08 AM IST

Updated : Jun 21, 2023, 12:50 PM IST

வாஷிங்டன்: கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11இல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில், ஜூன் 21 அன்று உலக யோகா தினத்தை கடைபிடிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உலக யோகா தினத்தை கடைப்பிடித்து வருகின்றனர், என ஐ.நா. தெரிவிக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு உள்ள நியூயார்க்கில் உலக யோகா தினத்தை ஒட்டி பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “Ocean Ring of Yoga என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் உலக யோகா தினம் மேலும் சிறப்பு பெற்று உள்ளது.

இது கடல் பரப்பின் மீது யோகாவின் எண்ணங்களை அளித்து அதனை ஊக்குவிப்பது என்பதன் அடிப்படையில் உருவாகி உள்ளது. நமது ரிஷிகளும், முனிவர்களும் யோகாவை ‘யுஜ்யதே ஆனென் இடி யோகா’ என அழைக்கின்றனர். அப்படி என்றால், அனைத்தையும் ஒருங்கிணைப்பது என பொருள். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பமாக கருதப்படுகிறது.

நாம் எப்போதும் அரவணைக்கும் மற்றும் இணைக்கும் மரபுகளை கூறி வருகிறோம். நாம் புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றைப் பாதுகாத்தோம். நாம் பன்முகத் தன்மையை வளப்படுத்தி, அதனைக் கொண்டாடி உள்ளோம். யோகா நம்முடைய நுண்ணறிவை விரிவடையச் செய்கிறது. அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை யோகா நமக்கு உணர்த்துகிறது.

இதன் மூலம் நாம் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பைச் செலுத்த வேண்டும் என்கிற அடிப்படையை பெற்றுக் கொள்கிறோம். எனவே, நமது முரண்பாடுகளை நாம் முடிவுக்கு கொண்டு வரலாம். நாம் யோகா செய்ய வேண்டும். மேலும், யோகா மூலம் நமது எதிர்ப்புகள் அல்லது முட்டுக்கட்டைகளை நீக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதரகக் குழு, 9வது உலக யோகா தினத்தை ‘உலகம் ஒரு குடும்பம்’ என்பதன் அடிப்படையில் கொண்டாட முடிவெடுத்தது. எனவே, இதற்கான ஏற்பாடுகள் நியூயார்க்கில் உள்ள வடக்கு புல்வெளி பகுதியில் வைத்து நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஐ.நா. உறுப்பு நாடுகள், ஐ.நா. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்பார்கள் என ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்த ஆண்டு இந்திய கப்பற்படையைச் சார்ந்த 19 கப்பல்களில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கப்பற்படை வீரர்கள் சுமார் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து யோகா தினத்தின் தூதுவர்களாக செயல்பட்டனர் என இந்திய கப்பற்படை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Modi US visit: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு! இந்தியாவில் டெஸ்லா கிளை?

Last Updated : Jun 21, 2023, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.