ETV Bharat / international

Landmine blast: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்னிவெடி தாக்குதல் - யூனியன் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் பஞ்ச்குர் பகுதியில், சாலையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நிலக்கண்ணி வெடியில் வாகனம் சிக்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

author img

By

Published : Aug 8, 2023, 11:01 AM IST

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்னிவெடி தாக்குதல் - யூனியன் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு!

பலுசிஸ்தான் : பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்கட்டார் பகுதியின் ஒன்றிய கவுன்சில் தலைவர் இஸ்தியாக் யாகூப் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர்.

அவர்கள் பயணித்த வாகனம், பஞ்ச்குர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, சாலையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நிலக்கண்ணி வெடியில் சிக்கியது. கண்ணி வெடி வெடித்து வாகனம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில், ஒன்றிய கவுன்சில் தலைவர் இஸ்தியாக் யாகூப் உள்ளிட்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இஸ்தியாக் யாகூப்பை குறிவைத்து இந்த கண்ணி வெடி தாக்குதல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தப்பட்டு உள்ளதாக டான் ஊடக செய்தியை மேற்கோள் காட்டி, பஞ்ச்குர் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அம்ஜத் சோம்ரோ தெரிவித்து உள்ளார்.

இஸ்தியாக் யாகூப் உள்ளிட்டோர் வாகனத்தில், சக்கர் பஜார் பகுதியில் இருந்து பல்கட்டார் பகுதியை நோக்கி வரும் போது, இந்த கண்ணி வெடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில், முகம்மது யாகூப், இப்ராகிம், வாஜித், பிடா ஹூசைன், சர்ப்ராஜ், ஹைதர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்து உள்ளதாக, அடையாளம் காணப்பட்டு உள்ள நிலையில், படுகாயம் அடைந்த 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், இதன்காரணமாக, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டான் ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இதேபோன்று நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் யாகூப் பல்காத்ரி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். இந்த தாக்குதலுக்கு, பலூச் விடுதலை முன்னணி (BLF) அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்த நிலையில், அதே அமைப்பு, இந்த தாக்குதலிலும் ஈடுபட்டு இருக்குமோ என்ற சந்தேகம் அதிகாரிகள் இடையே எழுந்து உள்ளதாக, எக்ஸ்பிரஸ் டிரிபுயூன் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க: Pakistan Train Accident: பாகிஸ்தானில் பயணிகள் ரயில் தடம்புரண்டு கோர விபத்து.. 22 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.