ETV Bharat / international

நெட்ஃபிளிக்ஸ் வீடியோ கேம்களுக்கு வரவேற்பு இல்லை - சப்ஸ்கிரைபர்களையும் இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!

நெட்ஃபிளிக்சின் வாடிக்கையாளர்கள் 99 சதவீதம் பேர், அதன் இலவச வீடியோ கேம்களை விளையாட முயற்சித்துக்கூட பார்க்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Netflix
Netflix
author img

By

Published : Aug 9, 2022, 2:22 PM IST

சான் ஃபிரான்சிஸ்கோ: முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ், கடந்த ஆண்டு முதல் தனது வாடிக்கையாளர்களுக்காக இலவச வீடியோ கேம்களை வழங்கியது. ஆனால், இந்த வீடியோ கேம்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நெட்ஃபிளிக்சின் வாடிக்கையாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அதன் இலவச வீடியோ கேம்களை விளையாடுவதாக ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. ஆப்டோப்பியா (Apptopia)என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், நெட்ஃபிளிக்சின் வாடிக்கையாளர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே அதன் வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள் என்றும், இந்த எண்ணிக்கை நெட்ஃபிளிக்சின் 221 மில்லியன் சப்ஸ்கிரைபர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டின் முதல் காலாண்டில் 2 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும், இரண்டாவது காலாண்டில் சுமார் பத்து லட்சம் சப்ஸ்கிரைபர்களையும் இழந்துள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெட்ஃபிளிக்ஸ் தனது சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில், சோதனை முயற்சியாகவே நெட்ஃபிக்ஸ் எபிக் கேம்ஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக கடந்த ஆண்டு தனது பங்குதார்களுக்கு நெட்ஃபிக்ஸ் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க:5ஜி அலைக்கற்றை ஏலம் 7ஆவது நாளாக தொடக்கம்... ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.