வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2017 ஆம் ஆண்டு பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது முதல் பொது நிகழ்ச்சிக்காக செவ்வாய்கிழமை (ஏப்.5) வெள்ளை மாளிகைக்கு திரும்பவுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை, தற்போதைய அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடன் இணைந்து விழாவைக் கொண்டாடுவார் என்று தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காப்பீடு திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
பிடன் பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி சீராக இருந்தாலும், பணவீக்கம் ஒரு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், குடும்பங்களின் சுகாதாரப் பாதுகாப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்கவும் பிடன் கூடுதல் நடவடிக்கை எடுப்பார் என்று வெள்ளை மாளிகை கூறியது.
சுகாதார செயலாளர் சேவியர் பெசெரா மற்றும் பிடனின் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் செவ்வாய்கிழமை நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.
இதையும் படிங்க : வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு