ETV Bharat / international

அமெரிக்கா - தென்கொரியா அணுசக்தி ஆலோசனைக்கு பதிலடி? - வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! - அமெரிக்கா தென்கொரியா ராணுவ ப

அமெரிக்கா - தென்கொரியா அணுசக்தி ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி, இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

North Korea
அமெரிக்கா
author img

By

Published : Jul 19, 2023, 11:20 AM IST

வட கொரியா: வட கொரியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கவும் இந்நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இருவரும் சந்தித்தபோது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தென்கொரியா அணுசக்தி ஆலோசனைக் குழு நிறுவப்பட்டது. வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே இந்த குழு நிறுவப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரிய படைகள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அடுத்தகட்டமாக மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டு ராணுவ நடவடிக்கைகளை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா அண்மைக்காலமாக அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 12ஆம் தேதி, வட கொரியா "ஹ்வாசோங்-18" என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து. இந்த ஏவுகணை வானத்தில் நீண்ட நேரம் பயணித்து இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்று தெரிகிறது. இந்த மோதல்களால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில் நேற்று(ஜூலை 18) அமெரிக்கா தென்கொரியா அணுசக்தி ஆலோசனைக் குழு, தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முக்கிய ஆலோசனை மேற்கொண்டது. இதில், இருநாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இருநாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா தென்கொரியா அணுசக்தி ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா இன்று(ஜூலை 19) மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடல் பகுதியிலிருந்து இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பியாங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து அதிகாலை 3:30 மணி முதல் 3:46 மணி வரையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், அவை கடலில் விழும் முன்பு சுமார் 550 கிலோ மீட்டர் ஆகாயத்தில் பறந்ததாகவும் தென்கொரிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் மட்டுமின்றி சர்வதேச சமூகத்திலும் அமைதிக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும், இதன் மூலம் வட கொரியா ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Meteorite: மொட்டை மாடியில் காஃபி குடித்த பெண்... விடாமல் விரட்டிய விண்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.