ETV Bharat / international

நியூயார்க்கில் பெட் ஸ்டோர்ஸில் நாய், பூனை, முயல் விற்பனைகளுக்குத் தடை!

நியூயார்க்கில் பெட் ஸ்டோர்ஸில் செல்லப்பிராணிகளை விற்பதற்கு தடைவிதித்து புதிய சட்டம் ஒன்று ஆளுநரால் வரையறுக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Dec 16, 2022, 10:30 AM IST

நியூ யார்க்கில் பெட் ஸ்டோர்ஸில் நாய், பூனை, முயல் விற்பனைக்கு தடை!

நியூயார்க்: நியூயார்க்கில் செல்லப்பிராணிகளான நாய், பூனை மற்றும் முயல்களை இனி, செல்லப்பிராணிகள் விற்பனைக்கூடங்களில் (பெட் ஸ்டோர்கள்) விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுநர் காதி ஹொச்சூல் கையெழுத்திட்ட புது சட்டத்தில் 2014ஆம் ஆண்டு முதல் பெட் ஸ்டோர்கள் அனைத்தும் மீட்கப்பட்ட மற்றும் தெருவில் ஆதரவற்று திரியும் விலங்குகளுக்கு அடைக்கலமாக மாற்றப்படும் எனவும்; அங்கிருந்து எந்த விலங்கையும் மக்கள் செல்லப்பிராணியாக தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்த சட்டத்தை கலிஃபோர்னியா நிறுவி, அந்த விற்பனைகளைத் தவிர்த்த முதல் மாகாணமானது. கலிஃபோர்னியாவிலும் பெட் ஸ்டோர்கள் ஆதரவற்ற விலங்குகளுக்கு அடைக்கலமாக மாற்றப்பட்டது. இதற்குப் பிறகு சில மாகாணங்களும் இதைத் தொடர்ந்தன. 2020இல் மேரிலாந்து நாய், பூனை விற்பனைகளை தடை செய்தபோது பெட் ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் இதுகுறித்து வழக்குத்தொடர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நியூ யார்க்கில் செல்லப்பிராணி ஆர்வலர்கள் வெகு நாட்களாக இந்த லாபத்திற்காக விலங்குகளை விற்கும் முறையை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்றும், அந்த இடங்களில் வளர்க்கப்படும் விலங்குகள் சித்ரவதை செய்யப்பட்டே வளர்த்தெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும் சிலர், இந்தத் தடையால் முறையான நல்ல விற்பனையாளர்களும் பாதிக்கப்படுவர் என்றும்; அவர்களை பாதிக்காதபடி இந்த சட்டமசோதாவை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால், இந்த சட்டம் வீட்டிலேயே செல்லப்பிராணிகளை வளர்த்தெடுத்து விற்பனை செய்பவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும்; நேரடியாக பிராணிகளை வளர்த்தெடுத்தவரிடமே பிராணிகளை வாங்கிக்கொள்வதன் மூலம் அந்தப் பிராணி பற்றிய தெளிவான விவரங்களை உரிமையாளரால் தெரிந்துகொள்ள முடியுமென்றும், இதற்கு இடையூறாய் வரும் இடைத்தரகரான பெட் ஸ்டோர்ஸ் என எவரும் தேவையில்லை எனவும் சில செல்லப்பிராணி ஆர்வலர்கள் இந்த புதிய சட்டத்தை ஆதரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: IYM 2023: ஐநா சபையில் ’மில்லெட் லஞ்ச்’ வழங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.