ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகிவரும் ஆய்வு இதழில் வெளியான கட்டுரையில், ஆறு கண்டங்களில் உள்ள 27க்கும் மேற்பட்ட நாடுகளில் உருவாக்கப்பட்டுவரும் தொடர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிதியளித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமண்டா லோட்ஸ், "நெட்ஃபிளிக்ஸ் எந்த அளவிற்கு உலகளாவிய தொலைக்காட்சி சேவையில் உருமாறியுள்ளது என்பதை சிலர் அடையாளம் கண்டுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் இப்போது சிங்கப்பூர், ஆம்ஸ்டர்டாம் மற்றும் சாவ் பாலோ போன்ற நாடுகளில் பிராந்திய அலுவலகங்களை திறந்துள்ளது.
கடந்த ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலிய தலைமையகத்தைத் திறந்த அந்நிறுவனம் தற்போது உலகளாவிய இணைய காட்சி ஊடகமாக மாறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
உலகளாவிய தொலைக்காட்சி சந்தைகளில் வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களின் மிக முக்கிய முகமாக நெட்ஃபிளிக்ஸ் உருப்பெற்றுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் நியமித்த தொடர்களில், பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படுகின்றன என்பது மிக சுவாரஸ்யமான ஒன்றாகும்.
நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணையத்தால் இலவசமாக ஒளிபரப்பக்கூடிய தொடர்கள் சில, தொலைக்காட்சி சந்தைக்கு போட்டித் துறையாக முற்றிலுமாக மாற்றியுள்ளன.
அத்துடன் அதன் 'பே-டிவி' என்ற வரையறையை சந்தைப் போக்கையே தலைகீழாக மாற்றியுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி +, ஸ்டான் மற்றும் டிஸ்னி + போன்றவற்றுடன் சரிசமமாக நெட்ஃபிளிக்ஸ் போட்டியிடுகிறது என்று பலர் நம்புகின்றனர்.
ஆனால், உண்மையில் இந்த சேவைகள் எதுவும் நெட்ஃபிளிக்ஸ் உடன் ஒப்பிடக்கூடிய அளவில் பன்னாட்டு விரிவாக்கத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை" என தெரிவித்தார்.