காட்மாண்டூ: நேபாளத்தின் தாரா ஏர் என்ற சிறிய ரக பயணிகள் விமானம் பொக்காரா நகரில் இருந்து புறப்பட்டு 22 நிமிடங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து நடுவானில் மாயமானது. இந்த 2 ஹெலிகாப்டர்களை கொண்டு விமானத்தை தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கோவாங் என்ற இடத்தில் அது விழுந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், முஸ்தாங் மாவட்டத்தின் சனோஸ்வேர் என்ற பகுதியில் விமானம் விழுந்து கிடப்பதை நேபாள ராணுவம் இன்று காலை கண்டறிந்துள்ளது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறிய உதிரி பாகங்களின் புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தற்போதுவரை பயணிகளின் நிலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அதில் , 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாளிகள் பயணித்துள்ளனர். இந்தியர்கள் நால்வரும் மும்பையின் தானே பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Nepal Army locates the crash site of Tara Air aircraft at Sanosware, Thasang-2, Mustang
— ANI (@ANI) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
The aircraft with 22 people including four Indians onboard went missing yesterday. pic.twitter.com/Gn920jfphk
">Nepal Army locates the crash site of Tara Air aircraft at Sanosware, Thasang-2, Mustang
— ANI (@ANI) May 30, 2022
The aircraft with 22 people including four Indians onboard went missing yesterday. pic.twitter.com/Gn920jfphkNepal Army locates the crash site of Tara Air aircraft at Sanosware, Thasang-2, Mustang
— ANI (@ANI) May 30, 2022
The aircraft with 22 people including four Indians onboard went missing yesterday. pic.twitter.com/Gn920jfphk
இதையும் படிங்க: 22 பேருடன் மாயமான நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!