வாஷிங்டன்: டெஸ்லாவின் முதன்மைச் செயல் அதிகாரியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டரில் சர்ச்சையான கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக வைத்துவருகிறார். இதனால், ட்விட்டர் நிறுவனம் இவரது பல ட்வீட்டுகளை நீக்கியிருக்கிறது.
இதற்கு மஸ்க், ட்விட்டரில் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடியவில்லை என்றும், தனது கைவசம் ட்விட்டர் வந்தால் முழு கருத்துசுதந்திரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படியே ஏப்ரல் 26ஆம் தேதி 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கினார்.
இந்தத் தொகை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 63 கோடியே 74 லட்சம் ரூபாயாகும். இந்த நிலையில், மஸ்க் மீண்டும் சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் மர்மமான முறையில் உயிரிழந்தால், அதற்கான காரணங்களை தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ட்வீட் அவரது பாலோயர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
இது வேடிக்கையாக இல்லை
இதனிடையே எலான் மஸ்கின் ட்வீட்டிற்கு அவரது தாயார் மே மஸ்க், இது வேடிக்கையாக இல்லை என்று கமெண்ட் செய்தார். இதற்கு மஸ்க், "மன்னிக்கவும். நான் உயிருடன் இருக்க, முடிந்த அனைத்தையும் செய்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
-
.@Rogozin sent this to Russian media pic.twitter.com/eMI08NnSby
— Elon Musk (@elonmusk) May 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@Rogozin sent this to Russian media pic.twitter.com/eMI08NnSby
— Elon Musk (@elonmusk) May 9, 2022.@Rogozin sent this to Russian media pic.twitter.com/eMI08NnSby
— Elon Musk (@elonmusk) May 9, 2022
உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்து வருவதால், ரஷ்யா அவருக்கு மிரட்டல் விடுத்துவருதாக கூறப்படும் நிலையில், இந்த ட்வீட்டை மஸ்க் பதிவிட்டுள்ளார். முன்னதாக மஸ்க், தனது ட்வீட்டில், "எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் உதவியுடன் உக்ரைனுக்கு தொலைதொடர்பு சாதனங்களை வழங்கிவருகிறது. இந்த தவறுக்கு மஸ்க் விலை கொடுக்க வேண்டும் என்று ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட படம் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்விட்டர் பழசு... கோகோ கோலா புதுசு! எலான் மஸ்க்கின் நெக்ஸ்ட் பிளான்..!