ETV Bharat / international

பிறரின் பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்யும் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் - எலான் மஸ்க்! - ட்விட்டர் ப்ளூ டிக்

மற்றவர்களின் பெயர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்யும் அனைத்து ட்விட்டர் கணக்குகளும் நிரந்தரமாக நீக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Musk
Musk
author img

By

Published : Nov 7, 2022, 2:08 PM IST

பாஸ்டன்: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த வாரம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றது முதலே, பல அதிரடியான நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

ட்விட்டரின் சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளை நீக்கினார். அதுமட்டுமல்லாமல் அந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் ஏராளமான ஊழியர்களை நீக்கி ஆள்குறைப்பு செய்தார். அதேபோல், ட்விட்டரின் ப்ளூ டிக்கைப் பெறுவதற்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார்.

இது பல்வேறு தரப்பினரிடமும் விமர்சனத்திற்குள்ளானது. இதனிடையே ஆள்குறைப்பு குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த மஸ்க், ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் நிறுவனத்திற்கு, ஆள்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

ட்விட்டரில் கடந்த சில நாட்களாக மஸ்க்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதைப் பயன்படுத்தி பலர் மஸ்க் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி லைக்குகளை வாங்கி வருகிறார்கள். எலான் மஸ்க்கின் புரொபைல் ஃபோட்டோ, அவரது பெயர் என அப்படியே மஸ்க்கின் கணக்கை ஜெராக்ஸ் எடுத்ததுபோல ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் இந்த கணக்கை உருவாக்கியதாக தெரிகிறது. இந்த கணக்கு எலான் மஸ்க் உடையது என நினைத்து பலரும் வைரலாக்கினர். இதையடுத்து அந்த கணக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

அதேபோல் சில பிரபலங்களும் தங்களது பெயர்களை மாற்றினர். அமெரிக்க நகைச்சுவை நடிகை கேத்தி கிரிஃபின், தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மஸ்க் என மாற்றினார். இதனால், அவரது கணக்கும் நீக்கப்பட்டது.

இந்த நிலையில், மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 'பகடி' என வெளிப்படையாக தெரிவிக்காமல், மற்றவர்களின் பெயர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்யும் அனைத்து ட்விட்டர் கணக்குகளும் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 200க்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.