வாஷிங்டன்: இயக்குநர் அந்தோணி ஃபுக்வா ‘மைக்கேல்’ என்ற பெயரில் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் சுயசரிதையை இயக்கவுள்ளார். ‘மைக்கேல்’ என்னும் சுயசரிதையில் மைக்கேல் ஜாக்சனின் வெளியில் தெரியாத சொந்த வாழ்க்கை பற்றியும், அவர் எவ்வாறு பாப் இசை உலகில் சிறந்து விளங்கினார் என்பது பற்றியும் விரிவாக காண்பிக்கப்படும் என அமெரிக்க ஊடக நிறுவனமான வெரைட்டி தெரிவித்துள்ளது.
கிரகாம் கிங் தயாரிக்கவுள்ள ‘மைக்கேல்’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கவுள்ளது. மேலும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையைப் பற்றியும், அவரது சிறந்த மேடை நடனங்கள் பற்றியும் படத்தில் காண்பிக்கப்படும்.
இந்த திரைப்படம் பற்றி இயக்குநர் ஃபுக்வா கூறுகையில், 'நான் எனது தொடக்க காலத்தில் இசை வீடியோக்கள் செய்துள்ளேன். இசையும் திரைப்படமும் என்னுள் ஆழமாகப் பதிந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை மைக்கேல் ஜாக்சனை போல் கவர்ச்சிமிகு நடன மேதையை நான் கண்டதில்லை.
மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சியினால் ஈர்க்கப்பட்டேன், மேலும் அவரது இசையுடன் அவரது கதையை திரையில் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
இதையும் படிங்க: தொலைகாட்சித் தொடர் இயக்க விருப்பம் - ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்