மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரை பகுதியில் இன்று (நவம்பர் 23) 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் விசிண்டே குயெர்ரேரோ அருகே காலை 8:40 மணியளவில் ஏற்பட்டுள்ளது. டிஜுவானாவிற்கு தெற்கே சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, சேதங்களோ பதிவாகவில்லை. அதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் பாஜா கலிபோர்னியாவில் பல வீடுகள் அதிர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
முன்னதாக, இந்தோனேசியாவின் சியாஞ்சூரில் நேற்று முன்தினம் (நவம்பர் 21) ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 268 பேர் உயிரிழந்தும், 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை