ETV Bharat / international

"எம்பாப்பே இந்தியாவில் சூப்பர் ஹீரோ போல திகழ்கிறார்" - பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு!

author img

By

Published : Jul 14, 2023, 6:14 PM IST

பிரான்சில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி, பிரபல கால்பந்து வீரர் எம்பாப்பேவை பாராட்டிப் பேசினார். எம்பாப்பே இந்திய இளைஞர்கள் இடையே ஒரு சூப்பர் ஹீரோ போல திகழ்கிறார் என்றும், பிரான்சை விட இந்தியாவில் அதிக மக்களுக்கு அவரை தெரிந்திருக்கலாம் என்றும் கூறினார்.

mbappe
எம்பாப்பே

பிரான்ஸ்: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று(ஜூலை 13) பாரிஸ் விமான நிலையம் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பாரிஸ் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதேபோல், பாரிஸ் விமான நிலையத்தில் ஏராளமான இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து பாரிஸில் பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இதையடுத்து, பிரான்ஸ் செனட் கட்டடத்தில் அந்நாட்டின் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சரை சந்தித்துப் பேசினார். பின்னர், பிரதமர் எலிசபெத் போர்ன் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஆற்றல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர். அதன் பிறகு, நேற்று இரவு அதிபர் மாளிகையான எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்து அளித்தார்.

முன்னதாக நேற்று, இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிலியன் எம்பாப்பே குறித்து பேசினார். எம்பாப்பே இந்தியாவில் மிகவும் பிரபலமானவர் என்றும், அவர் இந்திய இளைஞர்கள் இடையே ஒரு சூப்பர் ஹீரோ போல திகழ்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும், பிரான்சை விட இந்தியாவில் அதிக மக்களுக்கு எம்பாப்பேவை தெரிந்திருக்கலாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தற்போதைய தலைமுறை கால்பந்து வீரர்களில் கிலியன் எம்பாப்பே மிகவும் பிரலமாக இருக்கிறார். எம்பாப்பே, பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினா அணியை கதிகலங்கச் செய்த எம்பாப்பேவின் அனல் பறக்க வைத்த ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.