ETV Bharat / international

Hawaii fire accident: ஹவாய் காட்டுத் தீ - பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு!

Hawaii fire accident: அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் ஏற்பட்ட தீவிபத்து, கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்த விபத்துகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை காட்டிலும் இந்த பேரழிவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஹவாய் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு!

author img

By

Published : Aug 13, 2023, 5:03 PM IST

Updated : Aug 13, 2023, 5:26 PM IST

ஹவாய்: அமெரிக்காவின் ஒரு பகுதியான ஹவாய் தீவுகள் பசிபிக் கடலின் நடுவில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாயில் காலநிலை மாற்றம், காற்றில் ஈரப்பதம் இன்மை போன்ற காரணங்களால் காட்டுத்தீ ஏற்பட்டது. மக்கள் தங்களை இந்த தீயிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தும், தீயில் கருகியும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் அவர்களின் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் காட்டுத்தீயினால் அப்பகுதிகளில் உள்ள மொபைல் போன் டவர் செயல்படாதலாலும் மற்றும் தீவின் மேற்கு பகுதிகளில் பல வாரங்களாக மின்வசதி துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ள வீரர்கள் தெரிவித்து உள்ளனர்.

காட்டுத் தீயால் 55 நபர்கள் உயிரிழந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ, கடந்த ஒரு நூற்றாண்டில் நடந்த மிக மோசமான அமெரிக்க காட்டுத்தீயாகும் எனவும், கடந்த 2018ம் ஆண்டு வடக்கு கலிபோர்னியாவில் கேம்ப் ஃபயரில் (Camp Fire) ஏற்பட்ட விபத்தில் சுமார் 85 நபர்கள் உயிரிழந்தாக இருந்த நிலையில் இந்த சம்பவத்தில் 89 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 150 வருடம் பழமையான ஆலமரத்துடன் 53 உயிர்களையும் காவு வாங்கிய ஹவாய் காட்டுத்தீ!

முன்னதாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1918ல் வடக்கு மின்னசோட்டாவில் க்ளோக்வெட் தீயால் (Cloquet Fire broke out) பல கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் மக்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலான நிலையில் 100க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி இறந்தனர். இதுவே அமெரிக்கா வரலாற்றில் நடந்த மிக மோசமான பேரழிவு ஆகும்.

தற்போது மேலும் காட்டுத்தீ, மாய் தீவில் இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள நிலையில் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் உடல்களை மோப்ப நாய் மூலம் அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர் .

இது குறித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இது மிகப்பெரிய காட்டுத்தீ நிகழ்வு என அறிவித்து உள்ளார். மேலும் இந்த தீ விபத்தில் இந்தியா லலஹைனா தீவுற்கு பரிசாக அளித்த ஆலமரம் 150 ஆண்டுகள் ஆன நிலையில் காட்டுத் தீயில் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் இந்த செய்தியினை வீடியோவாக பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நைஜீரியாவில் மசூதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

Last Updated : Aug 13, 2023, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.