தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது (32) என்பவர், மேற்கு சிட்னியில் உள்ள ஆஸ்பர்ன் ரயில் நிலையத்தில் திங்கள் இரவு 12.03 மணிக்கு துப்புரவு பணியாளரை கத்தியால் வெட்டியுள்ளார். அவர்கள் இருவருக்கும் முன்பின் அறிமுகம் இல்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் அவர் போலீசாரையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன
செவ்வாய் கிழமை காலையில் செய்தியாளர்களிடம் பேசிய NSW போலீஸ் உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித் கூறுகையில், போலீசார் அவரை சுடுவதை தவிர வேறு வழி இல்லை. அவர் அதிகாரிகளை மிரட்டும் போது அவர்களுக்கு எதிர்வினையாற்ற நேரமில்லை. துப்பறியும் நபர்கள் அகமதுவின் மன ஆரோக்கியத்தை ஆராய்ந்து வருவதாகவும், காயமடைந்த துப்புரவு பணியாளர் தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அகமது பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்பர்னில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அகமதுவின் அடையாளங்களை உறுதி செய்த இந்திய தூதரகம் காவல்துறை அதிகாரிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக கூறியது. ஒரு இந்தியர் சுடப்பட்ட சூழ்நிலைகள் குறித்து முழுமையான அறிக்கை கேட்டிருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க: TikTok ban on Canada: கனடாவில் ‘டிக்டாக்’ செயலிக்கு தடை!